“முதலமைச்சர் கோப்பை” டென்னிஸ் போட்டியில் சென்ற மாணவிகளுக்கு பதக்கம், பரிசுத்தொகை

சென்னை:
முதலமைச்சர் கோப்பை -2023 மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் 17 இடங்களில் ஜுலை 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 27,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தப்போட்டிகள் ஜுலை மாதம் 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில் ஜூலை 3ம் முதல் 9ம் தேதி வரை ஏழு நாட்கள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் 108 பள்ளி மாணவ – மாணவிகள், 108 கல்லூரி மாணவ & மாணவிகள் விளையாடினர்.
சென்னை, நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில் நடைபெற்ற இறுதிப்போட்டிகளில் கல்லூரி பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜனனி ரமேஷ் (செங்கல்பட்டு) முதலிடம், மிருதுளா பழனிவேல் (செங்கல்பட்டு) இரண்டாமிடம், மிருதுளா மஹாலக்ஷ்மி (கோயம்புத்தூர்) மூன்றாமிடம் பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஓஜஸ் தேஜோ (செங்கல்பட்டு) முதலிடம், லோகித் அக்ஸா (சென்னை) இரண்டாமிடம், பூபதி (கோயம்புத்தூர்) மூன்றாமிடம் பெற்றனர்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜனனி ரமேஷ் – மிருதுளா பழனிவேல் (செங்கல்பட்டு) முதலிடம், ஹரிணி பார்த்திபன் & விதுளா (செங்கல்பட்டு) இரண்டாமிடம், ஜெனிபர் ராணி காவிய கிருபா அஸ்க் (சென்னை) மூன்றாமிடம் பெற்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் லோகித் அக்ஸா – சித்தார்த் ஆர்யா (சென்னை) முதலிடம், ஓஜஸ் தேஜோ- கிருஷ்ண தேஜ ராஜா (செங்கல்பட்டு) இரண்டாமிடம், பூபதி – கீர்த் திக் கல்யாண் (கோயம்புத்தூர்) மூன்றாமிடம் பெற்றனர்.
அனைத்து ஒற்றையர் பிரிவுப் போட்டிகளிலும் முதலிடம் பெற்ற வீரர் & வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையாக தலா ரூபாய் 1 லட்சம், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு தலா ரூபாய் 75 ஆயிரம் மற்றும் மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது.
அனைத்து இரட்டையர் பிரிவுப் போட்டிகளிலும் முதலிடம் பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு பரிசுத்தொகையாக தலா ரூபாய் 1.50 லட்சம், இரண்டாமிடம் பெற்ற அணிக்கு தலா ரூபாய் 1.12 லட்சம், மற்றும் மூன்றாமிடம் பெற்ற அணிக்கு தலா ரூபாய் 75 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு