பூஞ்ச்:
நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வரும் நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தினர் ரம்ஜான் கொண்டாட்டத்தை தவிர்த்தனர்.
அண்மையில் பூஞ்சில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தது. அவர்களை நினைவு கூர்வதற்காக இன்றைய கொண்டாட்டத்தை அக்கிராமத்தினர் துறந்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான ராணுவ வாகனம் பாலாகோட்டில் உள்ள பசூனி ராணுவ தலைமையகத்தில் இருந்து பழங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் சாங்கியோட்டில் நடைபெறவிருந்த இஃப்தார் விருந்துக்காக புறப்பட்டது. அந்த வாகனம் வரும் வழியில் பிம்பர் காலி பகுதியில் இஃப்தார் விருந்துக்காக இன்னும் சில பொருட்களை ஏற்றும்போதே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனால்தான் சாங்கியோட் கிராம மக்கள் கொண்டாட்டங்களைப் புறக்கணித்துள்ளனர்.
இது குறித்து அந்தக் கிராமத்தின் தலைவர் முக்தியாஸ் கான் கூறுகையில், “துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஐந்து வீரர்கள் உயிரிழந்த நிலையில் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவது. எங்களுக்கு அந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததுமே கிராமம் முழுவதும் கவலை தொற்றிக் கொண்டது. அதனால் நாங்கள் ரம்ஜானுக்கு தொழுகை மட்டுமே செய்கிறோம். பிரத்யேக கொண்டாட்டங்களைத் தவிர்க்கிறோம்“ என்றார்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





