தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் அடுக்கம்பாறையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பொது செயலாளர் பா.தினேஷ் குமார் அவர்கள் மாவட்டத்தின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.
2501 விருப்பாச்சிபுரம் நகர கூட்டுறவு சங்கம் ரேஷன் கடைகளை நடத்தக் கூடாது என கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் உத்தரவு இருந்தும் அதில் உள்ள பணியாளர்களை முதன்மை கூட்டுறவு சங்கத்தில் இணைக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வுகள் தடையாக உள்ளது. உடனடியாக முதன்மை சங்கத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதி எண் 236 பல்வேறு அமைப்புகளின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளை தனித்துறை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்பட வேண்டும். மகளிர் உரிமை தொகை பணியில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும்.
5.1.2024 அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அளவில் நடைபெறக்கூடிய போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட நிர்வாகிகளான துரைராஜ், சுரேஷ் குமார், சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.






