அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் : 1,303 ஆதி திராவிடர்கள் தொழில் முதலாளிகளாக உயர்வு

சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசு கொண்டு வந்துள்ள அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் 1,303 ஆதி திராவிடர்கள் தொழில் முதலாளிகளாக உய;ரந்துள்ளதாக,  திமுக   அரசு பெருமிதத்துடன்  தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மூலம், 1,303 ஆதி திராவிட மகளிர், இளைஞர்கள் தொழில் முதலாளிகள் ஆகி புதிய சாதனை படைத்துள்ளதாக திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் தொழில்முனைவோர் ஊக்குவிப்புத் திட்டங்களின் கீழ் மானியம் பெறுவதில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவுத் தொழில்முனைவோரின் பங்கு குறைவாயிருப்பதை உணர்ந்து அதனை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவுத் தொழில்முனைவோர்க்கெனப் பிரத்யேக சிறப்புத் திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை தொடங்கியது.

இத்திட்டத்தின் கீழ், ஆர்வமுள்ள புதிய தொழில்முனைவோர் உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்தத் தொழில் திட்டத்துக்கும் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மூலம், 1,303 ஆதி திராவிட மகளிர், இளைஞர்கள் தொழில் முதலாளிகள் ஆகி உள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.பட்டியலின, பழங்குடியின இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் ஓர் அருமையான திட்டம் தொழில் முன்னோடிகள் திட்டம்.

தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தொழில் முதலீட்டில் 35 சதவீத தொகையை அரசு மானியமாக வழங்குகிறது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் புதிய திட்டத்துக்கு 2023 -2024 ம் ஆண்டு ரூ.100 கோடி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

1,303 ஆதி திராவிட மகளிர் மற்றும் இளைஞர்களை தொழில் முதலாளிகள் ஆக்கியுள்ளது அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் திராவிட மாடல் அரசின் புதிய சாதனை ஆகும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400