கரூர்:
கரூர் அமராவதி ஆற்றின் அருகே சாயப்பட்டறைக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் தமிழ்நாடு நகரமைப்புத் துறை இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரைச் சார்ந்த தனியார் துணி நிறுவனம் அமராவதி ஆற்றின் அருகே சாயப்பட்டறை அமைத்து அதன் கழிவுகளை அமராவதி ஆற்றில் கலந்து வருகின்றனர். இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதுடன், சட்டவிரோதமாக அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்த்து தெரிவித்து கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தனசேகரன் சாயப்பட்டறை கட்டடத்தை இடித்து அகற்ற உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார். எனவே, கரூர் அமராவதி ஆற்றை சுற்றிலும் 5 கிலோ மீட்டர் தொலைவில் சாயப்பட்டறை, தொழிற்சாலைகள் கட்டுவதற்கு, தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில், சட்ட விரோதமாக அமராவதி ஆற்றின் அருகே சாயப்பட்டறைக்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டுமானங்களை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தது.
எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு நகரமைப்பு துறை இயக்குனருக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது,கடந்த 3 வருடம் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கபடவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் காலதாமதம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தரவில்லை எனில் நகரமைப்பு துறை இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டதுடன் வழக்கு விசாரணையை மார்ச்17ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்து.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு