ஆர்இசி லிமிடெட் நிறுவனம் பசுமைத் திட்டங்களுக்காக இத்தாலியின் எஸ்ஏசிஇ நிறுவனத்திடமிருந்து 60.5 பில்லியன் ஜப்பானிய யென்னை கடனாகப் பெறுகிறது…

இந்தியாவில் நிலையான வளர்ச்சியை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமும், மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனமுமான ஆர்இசி லிமிடெட், இந்தியாவில் தகுதியான பசுமை திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக ஜப்பானிய யென் தொகையான 60.536 பில்லியனை பசுமைக் கடனாகப் பெறுகிறது. இத்தாலிய ஏற்றுமதி கடன் நிறுவனம், எஸ்ஏசிஇ-யிடமிருந்து இந்தக் கடன் பெறப்படுகிறது.

இந்திய அரசின் ஒரு நிறுவனத்திற்கும் எஸ்ஏசிஇ நிறுவனத்திற்கும் இடையே ஏற்படும் முதல் கடன் ஒத்துழைப்பு இதுவாகும். இந்த கடன் வசதி ஆர்இசி நிறுவனத்திற்கான உத்திசார் முதலீடாக அமையும். இது இந்த நிறுவனத்தின் பசுமை நிதி கட்டமைப்புடன் இணைந்து, நிலையான வளர்ச்சியை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒத்துழைப்பு குறித்து ஊரக மின்மயமாக்கல் கழகமான ஆர்.இ.சி.யின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு விவேக் குமார் தேவாங்கன் கூறுகையில், “இந்த வெற்றிகரமான பரிவர்த்தனை இதுபோன்ற மேலும் ஒத்துழைப்புகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.

பசுமை எரிசக்திக்கான கடன் மற்றும் நிலையான வளர்ச்சித் திட்டங்களில் இந்திய – இத்தாலிய வணிக உறவுகளை இது மேலும் மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார். ஆர்இசி லிமிடெட்: ஊரக மின்மயமாக்கல் கழகமான ஆர்இசி என்பது மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு ‘மகாரத்னா’ மத்திய பொதுத்துறை நிறுவனமாகும், இது ரிசர்வ் வங்கியில் வங்கி சாரா நிதி நிறுவனம் (NBFC) மற்றும் உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் (IFC) என பதிவு செய்யப்பட்டுள்ளது. மின் உற்பத்தி, மின் பகிர்மானம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனங்கள், மின்கல சேமிப்பு, பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா திட்டங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த மின்சார உள்கட்டமைப்புத் துறைக்கும் ஆர்இசி நிதியுதவி அளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு