இந்திய சர்வதேசத் திரைப்பட விழா முன்னேற்பாடுகள் குறித்து கோவா முதலமைச்சரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் சந்தித்தார்….

சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்தை இன்று பனாஜியின் அல்டின்ஹோவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். சந்திப்புக்கு பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார். கோவாவில் நடைபெற உள்ள 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சருடன் விவாதித்ததாக அமைச்சர் எல். முருகன் கூறினார்.

“இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான நிரந்தர இடமாக கோவா அறிவிக்கப்பட்ட பின்னர், சர்வதேச திரைப்பட விழாவுக்கான புகழ் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பிரபலமான விழா என்பதால் இந்த ஆண்டும், அதிக கவனத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.

கடந்த ஆண்டு நடந்த பிரதிநிதிகளின் பதிவு எண்ணிக்கை இந்த விழாவின் பிரபலத்திற்கு ஒரு சான்றாகும். இந்த ஆண்டு சாதனை எண்ணிக்கையிலான பதிவுகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார் எல். முருகன்.

நாட்டில் உள்ள திரைப்படத் துறை, இந்த விழாவை சொந்தமாக்குவதை அரசு விரும்புகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். “இந்த விழாவை அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வாக கருதுவதை நாங்கள் விரும்பவில்லை. சர்வதேச திரைப்பட விழாவை இந்திய திரைப்படத் துறை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று அவர் கூறினார்.

முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் உடனான சந்திப்பு குறித்து பேசிய எல்.முருகன், ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸை அரசு விருந்தினராகக் கருதுமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறினார். “மைக்கேல் டக்ளஸின் வருகை இந்த ஆண்டு விழாவின் சிறப்பம்சமாக இருக்கும். விழாவில் அவருக்கு சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்க உள்ளோம் என்றும் அமைச்சர் எல். முருகன் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறுகையில், சர்வதேச திரைப்பட விழா குறித்து இருவரும் விவாதித்தோம். விழா தொடர்பான பல்வேறு விசயங்கள் குறித்த முன்னேற்பாடுகளையும் ஆய்வு செய்தோம். விழாவுக்கான அனைத்து பணிகளும் உரிய காலத்தில் முடிக்கப்படும்” என்றார்.

பின்னர், விழாவின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எல்.முருகன் கலந்து கொண்டார். பிலிம் பஜார் நடைபெறும் இடங்களான கோவா மேரியட் ரிசார்ட் மற்றும் ப்ரோமனேட் ஆகிய இடங்களை அமைச்சர் பார்வையிட்டார். விழாவின் முக்கிய இடங்களான கலா அகாடமி மற்றும் ஐநாக்ஸ் திரையரங்கம் மற்றும் இந்த ஆண்டு தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் சினி மேளாவை நடத்தும் கேம்பல் மைதானத்தையும் அவர் பார்வையிட்டார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400