இந்திய சூரிய சக்தி நிறுவனம் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்தியாவின் தூய்மை எரிசக்தி மாற்றத்திற்கு உத்வேகம் அளிக்கிறது

Posted On: 15 NOV 2025 4:42PM by PIB Chennai

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை  அமைச்சகத்தின் கீழ் உள்ள நவரத்ன நிறுவனமாக உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்திய சூரிய எரிசக்திக் கழகம், ஆந்திரப் பிரதேச மாநில அரசுடன் இணைந்து, இன்று நந்தியாலில் 1200 மெகாவாட் மின்கலன் எரிசக்தி சேமிப்பு அமைப்பு மற்றும் 50 மெகாவாட் கலப்பின சூரிய மின் உற்பத்தித் திட்டத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை இறுதி செய்துள்ளது.

விசாகப்பட்டினத்தில், ஆந்திரப் பிரதேச மாநில அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, இந்தியத் தொழில்துறை கூட்டமைப்புடன்  இணைந்து ஏற்பாடு செய்துள்ள  ஆந்திரப் பிரதேச கூட்டாண்மை உச்சி மாநாட்டின் போது இந்த ஒப்பந்தம்  இறுதி செய்யப்பட்டது.

இதற்கான ஆணை ஜனவரி 23, 2025 தேதி அன்று, மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சந்தை அடிப்படையிலான செயல்பாடுகளின் கீழ் 1200 மெகாவாட் மின்கலன் எரிசக்தி சேமிப்பு அமைப்புத் திட்டத்தின் செயலாக்க நிறுவனமாக இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தை மத்திய மின்சார அமைச்சகம் நியமித்துள்ளது. பின்னர் இந்த திட்டத்திற்கு இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் தலைவர் திரு சந்தோஷ் குமார் சாரங்கி 22 அக்டோபர் 2025 அன்று ஒப்புதல் அளித்தார். இந்த இரண்டு திட்டப் பணிகளின் முன்னேற்றம், மேம்பாடு போன்ற நடவடிக்கைகளை  மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400