இன்றைய இயற்கை மருத்துவம்…

முளைகட்டிய வெந்தயத்தை தினமும் எடுத்து கொள்வதால்.. இவ்வளவு நன்மைகள் உண்டா?
முளைகட்டிய வெந்தயத்தினை பல தலைமுறைகளாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
இன்று வரை இது பயன்பாட்டில் உள்ளது. இதில் பல மருத்துவ நன்மைகள் ஒளிந்துள்ளது. முளைகட்டிய வெந்தயத்தில் அதிகப்படியான விட்டமின்சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்ட்ஸ் நிறைந்திருக்கும். அதோடு ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜெனினும் அதிகமாக காணப்படுகிறது. இதனை சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தருகின்றது.

தற்போது இதனை எப்படி எடுத்து கொள்ளலாம்? இதன் நன்மைகளை தெரிந்து கொள்வோம். எப்படி எடுத்து கொள்வது? வெந்தய விதைகளை 3 நாட்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். அவை முளைகட்டிய வெந்தயமாக கிடைக்கும்.

அதன் மீது, மிளகுத் தூள் அல்லது உப்பு சேர்த்தும் சாப்பிடலாம். அல்லது சாலட்களுடன் முளைகட்டிய வெந்தயத்தை சேர்த்தும். அல்லது பச்சையாகவும் அப்படியே சாப்பிடலாம்.

நன்மைகள் முளைகட்டிய வெந்தயத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் நாள்பட்ட நீரிழிவு நோய் குணமாகும்.
மேலும், வெந்தயம் இரத்த ஓட்டத்தில் வெளியாகும் குளுக்கோஸை மெதுவாக செயல்பட செய்யும்.
இதனால், இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காது. தசைகள் மற்றும் மூட்டுகளை நல்ல நிலையில் வைத்திருக்க முளைகட்டிய வெந்தயத்தை உட்கொள்ளலாம்.

முளைத்த வெந்தயத்தில் பிளவனாய்டுகள், ஆல்கலாய்டுகள் மற்றும் டானின்கள் போன்றவை உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன. முளைக்கட்டிய வெந்தயத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு நிலைகள் மேம்படுகின்றன. முளைக்கட்டிய வெந்தயம் இரத்த அழுத்தத்தைக் கண்காணித்து சமநிலைப்படுத்துகிறது. அதோடு, கொழுப்பைக் குறைக்கவும், இரத்தத்தில் கொழுப்பு படிவதைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதனால் மாரடைப்பு அபாயங்கள் குறைவதோடு, இதய ஆரோக்கியமும் மேம்படும். முளைக்கட்டுவதற்கு வெந்தயத்தை ஊறவைப்பதால் அவை மென்மை அடைகின்றன.
இதனால் எளிதாக மற்றும் வேகமாக செரிமானம் நிகழும். முளைக்கட்டிய வெந்தயம் கணையத்தில் பீட்டா செல்கள் உருவாவதை மேம்படுத்துகிறது. அமிலத்தன்மை, வாய்வு, வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்றவற்றை கட்டுப்படுத்த முளைக்கட்டிய வெந்தயத்தை எடுத்துக் கொள்வது நல்லது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.