இரயில்வே பணிக்கு தேர்வான அதிகாரிகள் குடியரசு தலைவருடன் சந்திப்பு

ரயில், சாலை, விமானம் மற்றும் நீர் போக்குவரத்து ஆகியவை முழுமையாக ஒழுங்கிணைப்புடன் கையாளப்பட வேண்டும் ஜனாதிபதி முர்மு தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வேயில் 213 பயிற்சியாளர்கள் ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் இன்று (செப்டம்பர் 15, 2023) இந்திய ஜனாதிபதி ஸ்ரீமதி, திரௌபதி முர்முவை சந்தித்தனர்.

இந்திய ரயில்வே நாட்டின் உயிர்நாடி. எந்தவொரு வணிக நிறுவனத்தையும் போல் இல்லாமல் சாதாரண மக்களின் கனவுகளை மையமாக கொண்டுள்ளது. அதே நேரத்தில், நாடு தழுவிய இணைப்பு நாட்டின் பன்முகத்தன்மையைக் காட்டுகிறது. இந்திய இரயில்வே தனது சேவைகளை மேம்படுத்தி மக்களுக்கு மறக்கமுடியாத அனுபவங்களை வழங்குவதையும், இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இந்த பன்பாட்டுத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை காணும் வாய்ப்பை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான ஊக்கத்தை இந்த உட்கட்டமைப்பு வழங்வதாக ஜனாதிபதி தெரிவித்தார். பசுமைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ‘அமிர்த பாரத் ஸ்டேஷன்’ திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பது மற்றும் உலகத் தரம் வாய்ந்த வசதிகளைச் சேர்த்தல், மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வலு சேர்க்கும் முயற்சியாகும் என்று தெரிவித்தார். நவீனமயமாக்கப்பட்ட பசுமையான இந்திய ரயில்வேயை உருவாக்குவதிலும், வளர்ந்த தேசத்தை உருவாக்குவதிலும் இளம் அதிகாரிகள் ஆக்கப்பூர்வமாக இருப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பில் தேவையான திறன்கள், அறிவு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றைப் பெறுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். நாட்டிற்குள்ளும் மற்ற நாடுகளிலிருந்தும் சிறந்த நடைமுறைகளைப் படித்து பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இரயில், சாலை, விமானம் மற்றும் நீர் போக்குவரத்தை தனிமைப்படுத்தாமல் முழுமையான ஒருங்கிணைப்புடன் கையாள வேண்டும் என்றும், திறமையான பல்வகை போக்குவரத்து அமைப்பு நாட்டிற்குத் தேவை என்று அவர் கூறினார். ஆத்ம நிர்பார் மற்றும் வளர்ந்த தேசம் என்ற இலக்கை அடைவதற்கு இந்திய ரயில்வே அதிகாரிகளை மற்ற துறைகளின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400