டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக நாடாளுமன்றம் 4வது நாளாக முடங்கியது. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பியதால் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை மதியம் 2 மணி வரையும், மாநிலங்களவை மதியம் 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டன.
மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். அவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் கொடூரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக நாடாளுமன்றம் 4வது நாளாக முடங்கியது. இதனிடையே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அரசின் மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.