மதுரை: உசிலம்பட்டி அருகே கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது. நல்லுத்தேவன்பட்டி கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஏக்கர் பரப்பிலான கரும்புகள் சாய்ந்து சேதம் ஏற்பட்டதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இன்னும் இரண்டு மாதங்களில் பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் தாங்கள் பயிர் செய்ய கரும்புகள் சாய்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் தங்கள் வாழ்வாதாரம் பெருதும் பாதிக்கபட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழக அரசு எங்களின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





