
கன்னியாகுமரியில் பலமான காற்று காரணமாக கடல் அலைகள் அதிகரித்ததால், இன்று படகு சேவை ரத்து செய்யப்பட்டது. விடுமுறை என்பதால் பெரிய அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் சுமார் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்தபோதும், சேவை நிறுத்தப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர்.
நிலமை சீரானதும் மீண்டும் படகு சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.