திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் செங்காட்டுப்பட்டி கிராமத்தில் ரூ. 500 வாடகையில் சிறிய குடிசை வீடு. ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட வேண்டிய சூழநிலை. தந்தை இல்லை. தாய் கல் உடைக்கும் தினக்கூலி வேலை செய்கிறார். வீட்டில் மொத்தம் ஐந்து பிள்ளைகள்.
இச்சூழலிலும் ராஜேஷ் என்ற இந்த இளைஞர் சத்தமே இல்லாமல் சாதித்து நம் நாட்டிற்கு பெருமை தேடித் தந்திருக்கிறார்.
கத்தாரில் நடைபெற்ற ‘டெக்காத்லான்’ தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார் ராஜேஷ். டெக்காத்லான் என்பது லேசுபட்ட காரியமில்லை ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற பத்துவிதமான போட்டிகள் கொண்டதே டெக்காத்லான்.
இதில்தான் சாதித்திருக்கிறார் நம் தமிழன் ராஜேஷ். இவரின் கனவு “ஒலிம்பிக்கில் தங்கம்” வாங்கி நாட்டை பெருமைப்படுத்த வேண்டுமென்பதே. இவரது சாதனைக்கு நாமும் துணை நிற்போம். கடினமான சாதனையை சாதிக்க துடிக்கும் இந்த இளைஞருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவி புரிவாரா?