சம்பா ரவை கோதுமை பற்றி இன்றய சமையல் குறிப்பில் பார்ப்போம். சிறுவர்கள் முதல் வயதானவர்கள் விரும்பி உண்ணும் சம்பா ரவை கோதுமை.
தேவையான பொருட்கள்
1.5 கப் சம்பா ரவை
2.25 கப் தண்ணீர்
தேவையானஅளவு உப்பு
தேவையானஅளவு தேங்காய் துருவல்
தாளிக்க:
2 ஸ்பூன் கடலை எண்ணெய்
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் கடலைப்பருப்பு
2 வரமிளகாய்
கறிவேப்பிலை
சமையல் குறிப்புகள்
குறிப்பு – 1
1 கப் ரவைக்கு 1.5கப் தண்ணீர் தான் அளவு. 1.5 கப் ரவைக்கு 2.5கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
குறிப்பு – 2
முதலில் வெறும் வாணலியில்,ரவையை சேர்த்து 2நிமிடங்கள் நன்றாக வறுத்து தனியே வைக்க வேண்டும்.
குறிப்பு- 3
அதே சூடான வாணலியில் எண்ணெய் விட்டு,கடுகு,உளுந்து சீரகம் கடலைப்பருப்பு (அல்லது வேர்கடலை) ,வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். விரும்பினால் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
குறிப்பு 4
பின் 2.5 கப் தண்ணீர் சேர்த்து, அதில் உப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கொதிக்க விடவும்.
தேங்காய் இப்பொழுதே சேர்த்து வேக வைத்தால் வாசனை நன்றாக இருக்கும்.
குறிப்பு -5
நன்றாக கொதித்ததும்,வறுத்த ரவை சேர்த்து கிளறி மூடி போட்டு வேக விடவும். 1நிமிடத்தில் ரவை தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும்.
குறிப்பு -6
1 நிமிடத்திற்கு மூடி போட்டு வேக விட்டு பின், கிளறி விடவும்.இவ்வாறு ரவை உதிரியாக வரும்வரை மூடி போட்டு வேக விட்டு சில நொடிகளுக்கொரு முறை கிளறி விடவும்.அடிப்பிடித்தது போல் ஒட்டிக்கொள்ளும்.ஆறியதும்,கிளறினால் உதிர்ந்து வந்து விடும்.
குறிப்பு 7
அவ்வளவுதான்.சுவையான சம்பா கோதுமை ரவை உப்புமா தயார். இதனுடன் சர்க்கரை,வாழைப்பழம் சேர்த்து அல்லது தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடலாம்.






