சர்வதேச டி20 கிரிக்கெட்; சாதனை பட்டியலில் இணைந்த சூர்யகுமார் யாதவ்

கயானா:
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது.
3 வது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா, சூர்யகுமார் யாதவ் 83 ரன், திலக் வர்மா 49 ரன் (நாட் அவுட்) ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர் சூர்யகுமார் யாதவ். இவர் ரோகித், கோலியுடன் சாதனை பட்டியல் ஒன்றில் இணைந்துள்ளார். இந்த ஆட்டத்தில் சூர்யகுமார் 44 பந்தில் 83 ரன் அடித்தார். இதில் 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும்.
சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்தில் 4 சிக்சர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 100 சிக்சர்கள் அடித்த 3வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இரு இடங்களில் ரோகித் சர்மா (182 சிக்சர்), விராட் கோலி (117 சிக்சர்) உள்ளனர். சூர்யகுமார் யாதவ் (101 சிக்சர்) 3வது இடத்திலும், கே.எல்.ராகுல் (99 சிக்சர்) 4வது இடத்திலும் உள்ளனர்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு