பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் :-
தமிழ்நாட்டில் இருசக்கர வாகனங்களுக்கான சாலை வரியை இப்போதுள்ள 8 சதவீதத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை விலையுள்ள வாகனங்களுக்கு 10 சதவீதமாகவும், அதற்கு கூடுதலான விலை கொண்ட வாகனங்களுக்கு 12 சதவீதமாகவும் உயர்த்த தமிழக அரசு திட்டம் போட்டுள்ளது. இந்த வரி உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிக கடுமையாக பாதிக்கபடுவர்கள். இதுதவிர அனைத்து வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் என்ற பெயரில் அதிக தொகை வசூலிக்கப்படும் நிலையில், சாலை வரி ரத்து செய்யப்பட வேண்டுமே தவிர, உயர்த்தப்படக்கூடாது.