அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை பணிகளை அமைச்சர்கள் ஆய்வு….

தென்மேற்குப் பருவமழையினை முன்னிட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-136க்குட்பட்ட ராமசாமி சாலையில் உள்ள மழைநீர் வடிகாலினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த மழைநீர் வடிகாலில் வடியும் மழைநீரானது எம்.ஜி.ஆர். கால்வாயில் சேருமிடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மழையின் காரணமாக இந்தப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் மழைநீர் வடிகால் வழியே நீர் தங்குதடையின்றி வெளியேறி செல்வதை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும், நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, பெருங்குடி மண்டலம், வார்டு-186, புழுதிவாக்கம், சதாசிவம் நகரில் ஆய்வு மேற்கொண்டு மழைநீர் வடிகால்வாயில் மழைநீர் செல்வதைப் பார்வையிட்டனர். மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளும் போது, பாதுகாப்பு கருதி ஒருசில இடங்களில் உள்ள மின்கம்பங்களை அகற்றி, அதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்திட நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
திரு.மா.சுப்பிரமணியன் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு,
சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, அடையாறு மண்டலம், வார்டு-168க்குட்பட்ட
செட்டித்தோட்டம் பகுதி மற்றும் கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-142க்குட்பட்ட
சுப்பிரமணியன் சாலை, வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி, அடையாறு மண்டலம், வார்டு- 176க்குட்பட்ட கல்கிநகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மழைநீர் வடிகால்களைப் பார்வையிட்டு, முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
அடையாறு மண்டலம், வார்டு-176க்குட்பட்ட வேளச்சேரி உள்வட்ட சாலை

கல்கி நகர் மழைநீர் வடிகாலில் இருந்து மோட்டார் பம்பு மூலம் வீராங்கல் ஓடையில்
வெளியேற்றுவதைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, ச.அரவிந்த் ரமேஷ் அவர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் திரு.ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., அவர்கள், மத்திய வட்டார துணை ஆணையர் திரு.எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள், நிலைக் குழுத் தலைவர் (கணக்கு) திரு.க.தனசேகரன் அவர்கள், மின் தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குநர் திரு.இரா.மணிவண்ணன், மண்டலக் குழுத் தலைவர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், எஸ்.வி.ரவிச்சந்திரன், தலைமைப் பொறியாளர் எஸ்.ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் செல்வி நிலவரசி
துரைராஜ் அவர்கள், மோகன்குமார், கண்ணன் திருமதி
ரத்னா லோகேஷ், திரு.ஜெ.மணிகண்டன், திருமதி சமீனா செல்வம்
மற்றும் மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர