சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பான விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு, புதிய பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை அதிகாரப்பூர்வமாக வழங்கினார். மேலும், பொதுமக்களின் மருத்துவத் தேவைகளை எளிதாக்கும் வகையிலும், சுகாதாரத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள ‘நலம் டிஎன்’ (Nalam TN) என்ற புதிய இணையதள சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.சென்னையில் இன்று நடைபெற்ற சுகாதாரத் துறை விழாவில், மாற்றுத்திறனாளி மருத்துவர் பிரசாந்திக்கு முதல்வர் விஜய் மேடையை விட்டு கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணையை வழங்கிய செயலுக்கு திமுக மாற்றுத்திறனாளிகள் அணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இக்கூட்டத்தில் 751 உதவி மருத்துவ அலுவலர்கள், 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டதோடு, புதிய மருத்துவக் கட்டடங்கள் மற்றும் “நலம் TN” இணையதளச் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டன. விழாவில் மாற்றுத்திறனாளி மருத்துவர் பிரசாந்தியின் இடத்திற்கே நேரடியாகச் சென்று முதல்வர் விஜய் ஆணையை வழங்கிய நிலையில், இந்தச் செயலை திமுக மாற்றுத்திறனாளிகள் அணியின் மாநிலச் செயலாளர் பேராசிரியர் தீபக் நாதன் கடுமையாக விமர்சித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளால் ஏறி வர முடியாது என நினைத்து கீழே இறங்கிச் செல்வது ஒரு பழமைவாத மற்றும் கழிவிரக்கப் பார்வை என்றும், ஒரு மாற்றுத்திறனாளி மருத்துவராக உயர்ந்துள்ள நிலையில் அவரது கஷ்டங்களைப் பாராட்டி அனைவர் முன்னிலையிலும் மேடைக்கு வர வைப்பதே முறையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஏதுவாக முதலமைச்சர் பங்கேற்கும் மேடைகளை அனைவரும் எளிதாக அணுகத்தக்க வகையில் (Accessible) மாற்றியமைக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் மாற்றுத்திறனாளிகள் ஆணையமும் துறையும் தங்களின் கடமையில் இருந்து தவறுவதாக அர்த்தம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 88: பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார். விளக்கம்:நிலையானதல்லாத செல்வத்தை






