பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம் 600 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை திடீரென பெருமளவு உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தொலைதூரங்களில் இருந்து வரும் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் குறைந்த செலவில் பாதுகாப்பாகத் தங்குவதற்காகக் கோயில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட விடுதிகளின் கட்டணத்தைத் தனியார் விடுதிகளுக்கு இணையாக உயர்த்தியிருப்பது, அவ்விடுதிகள் கட்டப்பட்ட அடிப்படை நோக்கத்தையே சிதைப்பதாக அமைந்திருக்கிறது. எனவே, பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாகப் பார்க்கும் இத்தகைய கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், பக்தர்களுக்குச் சிரமத்தை உண்டாக்கும் முடிவுகளை அவசரகதியில் எடுக்கக் கூடாது என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசையும், இந்து சமய அறநிலையத்துறையையும் வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






