தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை : வேகமாக பைக் ஓட்டியதைக் கண்டித்ததால் கொடூரம்!

தூத்துக்குடியில், தெருவுக்குள் வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதைக் கண்டித்த பன்றி இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் திரேஸ் நகரைச் சேர்ந்த மணி மகன் சேகர் (40). இவர் மாதா நகர் பகுதியில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். நேற்று (ஜூலை 13) இரவு 9.30 மணி அளவில் மாதா நகர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே தனது நண்பர்கள் இருவருடன் சேகர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று வாலிபர்கள் மதுபோதையில் அதிவேகமாக வந்துள்ளனர்.

சேகர் அவர்களை வழிமறித்து, குழந்தைகள் நடமாடும் சிறிய தெருவுக்குள் ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள் எனக் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சேகர் அந்த வாலிபர்களில் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து மூவரையும் அனுப்பி வைத்தனர்.

சிறிது நேரத்தில், தாக்குதலுக்குள்ளான வாலிபர் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அங்கு நின்று கொண்டிருந்த சேகரை இருவரும் சேர்ந்து அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். பலத்த காயமடைந்த சேகர், 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஜூலை 14 காலை 6 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இக் கொலை சம்பவம் குறித்துத் தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய இரு வாலிபர்களையும் தீவிரமாகத் தேடி வருகிறார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.