திமுக இளைஞரணி பொறுப்புகளில் 609 பேர் நியமனம்: உதயநிதி ஸ்டாலின் அதிரடி….

சென்னை: தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. இளைஞர் அணியின் செயலாளராக 4 ஆண்டுகளை நிறைவு செய்து, 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். இந்த மகிழ்வான தருணத்தில் திமுக மாவட்ட- மாநகரங்களுக்கான இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த நான்கு ஆண்டுகளில், கிளை அளவிலும், வட்ட, வார்டு அளவிலும் இளைஞர் அணி அமைப்பை உருவாக்கியது, தொகுதி தோறும் `திராவிட மாடல்’ பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை நடத்தியது, முரசொலியில் பாசறைப் பக்கத்தைத் தொடர்ந்து தயாரிப்பது, இல்லம்தோறும் சென்று இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நடத்துவது என பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளோம். அந்த வகையில், திமுக பொதுக்குழுவில் அனைத்து அணிகளும் சிறப்பாகச் செயலாற்றிட வேண்டும் எனவும், அணிகளுக்கான புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படியும் திமுக தலைவர் அறிவுறுத்தினார். அதையொட்டி, இளைஞர் அணிக்கான மாவட்ட-, மாநகர, -மாநில நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பணிகளை விரைந்து தொடங்கினோம்.
புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான அறிவிப்பை கடந்த டிசம்பர் 12-ம் தேதி வெளியிட்டோம். 72 திமுக மாவட்டங்களிலிருந்தும் 4,158 விண்ணப்பங்கள் குவிந்தன. இளைஞர் அணியில் உள்ள 9 மண்டலங்கள் வாரியாக நேர்காணலுக்கான தேதிகளை அறிவித்தோம்.
அந்தப் பணி அவ்வளவு எளிதானதாக அமைந்துவிடவில்லை. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், சேலம் எனப் பயணித்துப் பல நாட்கள் பல மணிநேரங்கள் நேர்காணல்கள் தொடர்ந்தது. யாரைத் தேர்வு செய்வது யாரை விடுவது என எண்ணும் வகையில், நேர்காணல்கள் அமைந்தன.
எங்களின் மெனக்கெடல்களை தலைவர் வாழ்த்தியது பெரும் உற்சாகத்தைத் தந்தது. அனுபவம் வாய்ந்த சில அமைப்பாளர்- துணை அமைப்பாளர்கள் அதே பொறுப்புகளில் தொடர்ந்து கழகப் பணியாற்ற தலைவர் வாய்ப்பு வழங்கியுள்ளார். விண்ணப்பித்த 4,158 நபர்களிலிருந்து 609 பேர் தேர்வாகி, இளைஞர் அணியின் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
இளைஞர் அணியை `இயக்கத்தின் புது இரத்தம்’ என்பார் கலைஞர். புத்துணர்ச்சியோடு இயக்கப் பணியைத் தொடங்கியுள்ள நீங்கள் அது சற்றும் குறைந்திடாமல் பணிகளைத் தொடர்ந்திட வேண்டும். பேரறிஞர்- முத்தமிழறிஞர்- பேராசிரியர் எனும் இயக்கத்தின் தத்துவத் தலைவர்களிடம் நேரடியாக அரசியல் பாடம் பயின்று அணியை வளர்த்தெடுத்த நம் கழகத் தலைவர் வழியில் செயலாற்றி கழகத்தின் வெற்றிக்கு உழைத்திட வேண்டும்.
கழகத்தின் வளர்ச்சியும் வெற்றியும் வெறும் கழகத்திற்கானது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்தத் தமிழ் நாட்டிற்கான வெற்றி. இளைஞர் அணியின் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கலைஞரின் நூற்றாண்டிலும், இளைஞர் அணியை வளர்த்தெடுத்த நம் தலைவர் கழகத்தின் தலைவராகச் செயலாற்றும் இந்தத் தருணத்திலும் இளைஞர் அணியின் பொறுப்புக்கு வந்துள்ளீர்கள். கலைஞர் நம் தலைவருக்கு வழங்கிய அறிவுரை போல், இதைப் பதவியாக எண்ணாமல், பொறுப்பாக உணர்ந்து செயல்படுவீர்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்திய ஒன்றியம் மிக இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாசிஸ்ட்டுகளை விரட்டுவதற்கு பெரும் முன்னெடுப்பாக நம் தலைவர்- முதலமைச்சர் இந்திய ஒன்றியம் முழுவதிலும் உள்ள தோழமை சக்திகளை ஒருங்கிணைக்கிறார். அதற்கு தலைவரின் கரங்களை வலுப்படுத்தும் பெரும் பொறுப்பு, நம்மிடம் உள்ளது. கழகத்தின் சாதனைகளை ஒவ்வொருவரின் மனதிலும் நிலைநிறுத்தும் வகையில், நம் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும்.அதைச் செய்து காட்டுவோம்..! நாற்பதையும் வென்று கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடுவோம்! என்று குறிப்பிட்டுள்ளார்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு