15. பிறனில் விழையாமை
பிறன் மனைவியை விரும்பாமை.
————————————
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். (குறள் 141)
விளக்கம்:
உலகத்தில் அறம், பொருள், இவற்றின் அடிப்படை அறிந்தவர்களிடத்தில் வேறு ஒருவனுக்குச் சொந்தமான வேறொருவருடைய மனைவியை விரும்புகின்ற மடமை இல்லை.







