19. புறங்கூறாமை
ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது தீதாகப் பேசாதிருத்தல்.
==================================================================
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும் (குறள் 185)
விளக்கம்
ஒருவன் அறக்கருத்துகளைச் சொல்லும் நல்லவன் என்பது அவன் பிறரைப்பற்றி புறங்கூறும் பொழுது அவன் அறத்தை அவன் உள்ளம் அறியச் சொல்லவில்லை என்னும் சிறுமையால் வெளிப்பட்டுவிடும்.







