20. பயனில சொல்லாமை
பயனில்லாத வீண் சொற்களைச் சொல்லாதிருத்தல்.
==========================================
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து (குறள் 194)
விளக்கம்
ஒருவன் எந்தப் பயனோடும் பொருந்தாத பண்பற்ற சொற்களைப் பலரிடத்திலும் சொல்லுதல், அவனை அறத்தோடு பொருந்தாமல், நன்மையிலிருந்து நீக்கும்.







