20. பயனில சொல்லாமை
பயனில்லாத வீண் சொற்களைச் சொல்லாதிருத்தல்.
—————————————————
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்ட் பதடி செயனல் (குறள் 196).
விளக்கம்
பயனில்லாத சொற்களைப் பலகாலும் விரும்பிச் சொல்பவனை மகன் என்று சொல்லக்கூடாது மக்களுள் பதர் என்று சொல்ல வேண்டும்.







