21. தீவினையச்சம்
தீய செயல்களுக்கு அஞ்சி அவற்றைச் செய்யாதிருத்தல்
=========================================================
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடி உறைந் தற்று.
விளக்கம்
ஒருவனது நிழல் அவனை விட்டு நீங்காமல் அவன் காலடிகளிலே தங்கி இருத்தலைப் போன்று தீயவை செய்தவர்க்குத் தவறாமல் கெடுதல் நிகழும்…







