22. ஈகை
ஏழைகளுக்கு ஈதல.
=================================================================
வறியாா்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து… (குறள் 221)
விளக்கம்
பொருளற்ற ஏழைகளுக்கு அவர் வேண்டிய பொருளைக் கொடுப்பதே ஈகை
என்னும் அறச்செயலாகும். மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் கடன் கொடுக்கும்
தன்மையை உடையது (எதிர்பார்த்துக் கொடுப்பது).







