1. அறத்துப்பால் : 2. இல்லறவியல் : 7. மக்கட்பேறு
மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்ப மற்றுஅவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு – குறள் : 65
பெற்றோர்க்கு, தம் மக்களின் உடம்பைத் தொட்டு அரவணைத்துக் கொள்ளுதல் உடலுக்கு இன்பம் தரும். தம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம் தரும்.