20 பயனில சொல்லாமை
பயனில்லாத வீண் சொற்களைச் சொல்லாதிருத்தல்
============================================
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்
விளக்கம்
அரிய பயன்களை ஆராய வல்ல அறிவுடையார் மிகுந்த பயன் இல்லாத சொற்களை ஒரு போதும் சொல்லமாட்டார்.







