தமிழக அரசால் 2023-2024-ஆம் ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதிற்கு, திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள், இவ்விருதிற்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில்(awards.tn.gov.in) 26.12.2023 முதல் 31.01.2024-க்குள் விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொள்கிறார்.
திருநங்கையர் தின விருது வழங்கும் பொருட்டு கருத்துருக்களை அனுப்புவதற்கான விதிமுறைகள்
1. திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும்.
2. குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்.
3. திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.
கையேட்டில் (Booklet) இணைக்கப்பட வேண்டியவை
1. பொருளடக்கம் மற்றும் பக்க எண்.
2. உயிர் தரவு (BioData) மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2
3. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பரிந்துரைக் கடிதம்
4. மாவட்ட சமூக நல அலுவலரின் பரிந்துரைக் கடிதம்
5. சுயசரிதை
6. தனியரைப் பற்றிய விவரம் (ஒரு பக்க அளவில்) –Soft &Hard copy
7. விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம் / விருதின் பெயர்
/ யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்)
8. சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்)
9. சேவையைப் பாராட்டி பத்திரிக்கை செய்தித் தொகுப்பு
10. சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை
11. சமூக சேவையாளரின் / சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக
பயனாளிகள் பயனடைந்த விவரம்
12. சமூகப் பணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து
பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று.
13. இணைப்பு படிவம் தமிழில் (மருதம் எழுத்துருவில்) முழுமையாக பூர்த்தி செய்து
Soft &Hard copy அனுப்பப்பட வேண்டும்.
14. கையேடு (Booklet) தமிழில் அச்சு (Print) செய்யப்பட்டு தலா 2 நகல்கள்
சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் அனுப்பப்பட வேண்டும்.







