இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் குறித்த கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.












