
- உ.பி. நொய்டாவின் பிஷாரா கிராமத்தில் 2015 ஆம் ஆண்டு முகம்மது அக்லாக் என்பவர் வீட்டில் பசுமாட்டுக்கறி வைத்திருந்தாக கூறி, ஒரு கும்பல் அவரை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து அடித்து படுகொலை செய்தனர். அவரது மகன் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
- இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது மட்டுமல்லாமல், சர்வதேச ஊடகங்களால் கடுமையாக கண்டனம் தெரிவித்த நிலையில்,
- முகம்மது அக்லாக் வீட்டிலிருந்த இறைச்சியை ஆய்வுகூடத்தில் ஆய்வு செய்ததில், அது ஆட்டுகறி என உறுதியானது.
- முகம்மது அக்லாக்கை கொன்ற கும்பலின் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- இவ்வழக்கு பத்தாண்டுகள் கழிந்த நிலையில், தற்போது குற்றவாளிகள் மீதான வழக்கினை உத்தரபிரதேச அரசு வழக்கை வாபஸ் பெற விண்ணப்பித்துள்ளது.