நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (12.07.2023) சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அடையாறு மண்டலம், வார்டு-169, ஜோதி அம்மாள் நகரில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ், ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் படிப்பகத்துடன் கூடிய நூலகம் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர். பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மு. மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னைப் பெருநகர் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் ஆர். கிர்லோஷ் குமார், தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம். பி. அமித், மண்டலக் குழுத் தலைவர்கள் ஆர்.துரைராஜ், எம். கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர், தலைமைப் பொறியாளர், மண்டல அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






