பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-56, பி.ஆர்.என்.
கார்டன் பகுதியில் உள்ள 60 ஆண்டுகளுக்கு முந்தைய பழுதடைந்த அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் 146
குடியிருப்புதாரர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாகக் கட்டப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு
செய்யப்பட்டதற்கான தற்காலிக ஆணையினையும், கருணைத் தொகையாக தலா ரூ.24
ஆயிரத்திற்கான காசோலையினையும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு இன்று (15.06.2023) வழங்கினார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக
அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் இப்பகுதியில் கட்டப்பட்டு, அதில் 146
குடியிருப்புதாரர்களும் மீள் குடியேற்றம் செய்யப்படுவார்கள் என இந்து
சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் திருமதி ஆர்.பிரியா, வடக்கு வட்டார துணை ஆணையாளர் திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர் திரு.பி.ஸ்ரீராமுலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.







