பெண் முகத்தில் மூவர்ணம் இருந்ததால் பொற்கோவிலில் அனுமதி மறுப்பு: குருத்வாரா கமிட்டி விளக்கம்

அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் புகழ் பெற்ற சீக்கிய கோவிலான பொற்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஒரு ஆணுடன் பெண் சென்றுள்ளார். அவரது முகத்தில் மூவர்ண சின்னம் இருந்தது. அவருக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய வீடியோ ஒன்று வைரலானது.
அதில், அந்த பெண் பொற்கோவிலுக்குள் செல்ல ஏன் தன்னை அனுமதிக்க முடியாது? என்று கேட்டதற்கு, அனுமதி மறுத்த நபர், பெண்ணின் முகத்தில் வர்ணம் பூசிய கொடியின் உருவம் இருந்த விவரங்களை சுட்டி காட்டியுள்ளார்.
இது பஞ்சாப் என்றும் இந்தியா அல்ல என்றும் அந்த நபர் வீடியோவில் கூறுகிறார். இந்த வீடியோ வைரலானதும் அதற்கு சமூக ஊடகத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
இதனை தொடர்ந்து, ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியை சேர்ந்த பொது செயலாளர் குர்சரண் சிங் கிரெவால் நடந்த சம்பவத்திற்கு அளித்துள்ள விளக்கத்தில், இது சீக்கிய கோவில். ஒவ்வொரு மத தலத்திற்கும் என்று ஒழுங்கு இருக்கும். நாங்கள் ஒவ்வொருவரையும் வரவேற்கிறோம். அதிகாரி ஒருவர் தவறாக நடந்து கொண்டார் என்றால் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். அந்த பெண்ணின் முகத்தில் இருந்த கொடி நம்முடைய தேசிய கொடி இல்லை. அதில் அசோக சக்கரம் இல்லை. அது ஓர் அரசியல் கொடியாக கூட இருக்கலாம் என்று தெரிவித்தார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400