பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின் சார்பில் தேசிய தொழில்நுட்ப சிந்தனை அரங்கம் (DEVXPO 2K23 ) நிகழ்வு…!

திருவள்ளூர்:
ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப சிந்தனை அரங்கம்(DEVXPO 2K 23 )என்கிற நிகழ்ச்சி கல்லூரி வளாக அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் Dr.CP. கார்த்திகேயன் தலைமை வகித்தார். மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக Dr.V.ராஜேஷ் குமார் (தலைமை மேலாளர் L & T CHENNAI) மற்றும் . B. பெருமாள் ராஜா ( மேலாளர் , AGSC) ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் G. முத்துகுமார் வரவேற்புரை வழங்கினார். கணிப் பொறியியல் துறை மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையை சேர்ந்த இறுதியாண்டு மாணவர்கள் S. சந்தோஷ் குமார் மற்றும் T. பிஜூ டேனியல் ஆகியோர் தேசிய தொழில்நுட்ப சிந்தனை அரங்கத்தின் ( DEVXPO 23) நோக்கம் பற்றி விரிவாக கூறினார்கள்.

மேலும் பேராசிரியை A. மஞ்சு பிரியா மற்றும் பேராசிரியை V . இந்துமதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்கள்.

ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் Dr. CP. கார்த்திகேயன் அவர்கள் DEVXPO 2k23 சிந்தனை அரங்கத்தின் முக்கியத்துவத்தை பற்றி சிறப்புரை ஆற்றினார்.

1995 ஆம் ஆண்டு தொடங்கிய கல்லூரியில் பல்கலை கழக அளவில் பத்துக்கும் மேற்பட்ட தங்க பதக்கம் வென்ற மாணவர்களை இக்கல்லூரி உருவாக்கியுள்ளது என்றும், 83 மாணவர்கள் அண்ணா பல்கலை கழக தேர்வு மதிப்பெண்கள் பட்டியலில் முன்னிலை வகித்தனர் எனவும் பேசினார். மேலும் நிகழ்ச்சியினை முன்னின்று ஏற்பாடு செய்த பேராசிரியர்களையும், மாணவர்களையும் வெகுவாக பாராட்டினார்.

DEVXPO 2K23 சிந்தனை அரங்கத்தில் தொழில்நுட்ப நிகழ்வுகளாக
தாள் விளக்கக்காட்சி,
பிழைத்திருத்தம்,
மோக் நேர்காணல்,
பிரையன் ஸ்டோர்ம்,தொழில்நுட்பம் அல்லாத நிகழ்வுகளாக பாக்ஸ் கிரிக்கெட்,
ஐ.பி.எல் ஏலம், ஒலி சிசில் போன்ற வேடிக்கையான நிகழ்வுகள் நடைபெற்றன.

இருபத்தைந்து மாணவ மாணவியர் கலந்துகொண்ட தாள் விளக்க காட்சியில் முதல் பரிசினை மீனாட்சி பொறியியல் கல்லூரியை சேர்ந்த I. பிரியதர்ஷினி என்கிற மாணவியும், இரண்டாம் பரிசை வேல்டெக் மல்டிடெக் பொறியியல் கல்லூரியை சேர்ந்த G. அர்ஜுன் என்கிற மாணவரும் வென்றனர்.

பிழைத்திருத்த போட்டியில் முதல் பரிசினை சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர் சிவம் குமார் பாண்டே தட்டி சென்றார். மேலும் இரண்டாம் பரிசினை வேலம்மாள் பொறியியல் கல்லூரியின் மாணவர் K. மோகன்ராஜ் வென்றார்.

மோக் நேர்காணல் போட்டியில் முதல் பரிசினை வேல்டெக் மல்டிடெக் பொறியியல் கல்லூரியை சேர்ந்த குஷால் என்ற மாணவரும், இரண்டாம் பரிசினை செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் T. சரவண பாண்டி வென்றனர். பிரையன் ஸ்ட்ரோம் போட்டியில் முதல் பரிசினை ஜே.என்.என். பொறியியல் கல்லூரி மாணவர் D. விக்னேஷ் வென்றார், இரண்டாம் பரிசினை ஸ்ரீ ராமச்சந்திரா கல்லூரியை சேர்ந்த மாணவர் ஹரி வென்றார்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்லூரி நிர்வாக இயக்குநர் பாலசுப்ரமணியம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியின் இறுதியாக பேராசிரியை M. பிரியங்கா நன்றி உரை நல்கினார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின் சார்பில் தேசிய தொழில்நுட்ப சிந்தனை அரங்கம் (DEVXPO 2K23 ) நிகழ்வு…!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400