பொன்னமராவதி அடுத்த கீழத்தானியத்தில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் உள்பட 18 பேர் காயம்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த கீழத்தானியத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் களைகள் முட்டியதில் 18 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கீழதானியம் கரையூர் அய்யனார் கோவில் திருவிழாவை ஒட்டி நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 500 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந்த போட்டியை இலுப்பூர் ஆர்டிஓ குழந்தைசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், கொட்டும் மழையில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகள் மாடுபிடி வீரர்களை அச்சுறுத்தியபடி சென்றன. சில காளை மாடுபிடி வீரர் தீரமுடன் திமிலை பிடித்து அடக்கினர்.  

போட்டியில் வென்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு வீட்டு உபயோ பொருட்கள், டிவி, சைக்கிள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.  இந்த போட்டியின்போது காளைகள் முட்டியதில் 18 பேர் காயமடைந்தனர். இவர்களில் 6 பேர் மாடுபிடி வீரர்கள், 12 பேர் பார்வையாளர்கள் ஆவர். இவர்களுக்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிக்சை அளித்தனர். ஒருவர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.