மனநலம் பாதித்த வாலிபர் வயிற்றில் ‘ஹேர்பின், பிளேடு, ஊக்குகள்’: உடனடியாக அகற்றிய டாக்டர் குழு

புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு 20 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவரை, அவரது உறவினர்கள் அழைத்து வந்தனர். அந்த வாலிபருக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அதனை தாங்க முடியாமல் துடித்து வருவதாக மருத்துவரிடம் தெரிவித்தனர். உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர், அந்த வாலிபரின் வயிற்றில் பிளேடு, ஹேர்பின், ஊக்குகள் குவியலாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அந்த வாலிபரின் வயிற்றில் இருந்து எண்டோஸ்கோபி கருவி மூலம் 13 ஹேர்பின், 5 ஊக்குகள், 5 பிளேடுகள் உள்ளிட்ட இரும்பு பொருட்களை அகற்றினர்.
இதுகுறித்து மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் தெரிவிக்கையில்,- வாலிபரின் வயிற்றில் இருந்து இரும்பு பொருட்கள் அகற்றிய பின்னர் அந்த வாலிபர் வழக்கமான உணவுகளை சாப்பிட தொடங்கியுள்ளார். அதனால் மறுநாளே அவர் உடல் நலத்துடன் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த செயல்முறை சவாலாக இருந்தது. குறிப்பாக வயிற்றில் இருந்த ஹேர்பின்கள், ஊக்குகள் போன்றவை உடல்நலத்துக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும். அதை அகற்ற அதிக தொழில்நுட்பதிறன் தேவைப்படும். அதனை எங்கள் மருத்துவ குழுவினர் சிறப்பாக செய்து சாதனை படைத்தோம் என்றார்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு