மாநிலங்களவையில் இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது விவாதம்

புதுடெல்லி:
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று முன்தினம் முதல் அலுவலாக, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், நேற்று மக்களவை கூடியவுடன், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சபையின் பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காக அர்ஜுன்ராம் மேக்வால் முன்வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
“மகளிர் மசோதா, மிகவும் முக்கியமானது. இதை ஒருமனதாக நிறைவேற்றி தாருங்கள். கருத்தொற்றுமை ஏற்பட்டால் நல்லது. விவாதத்தில் கூறப்படும் ஒவ்வொரு யோசனையையும் நாங்கள் பரிசீலிப்போம். நாடாளுமன்றம் முடிவு செய்தால், மகளிர் இடஒதுக்கீட்டை 15 ஆண்டுகளுக்கு மேலும் நீட்டிக்க முடியும்.”
காரசார விவாதத்துக்கு பின்னர், மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது ஓட்டெடுப்பு நடந்தது. மசோதாவுக்கு ஆதரவாக 454 எம்.பி.க்கள் ஓட்டு போட்டனர். எதிராக 2 எம்.பி.க்கள் மட்டும் வாக்களித்தனர். எனவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமோக ஆதரவுடன் நிறைவேறியது. நடப்பு கூட்டத்தொடரில் மக்களவையில் முதலாவதாக நிறைவேற்றப்பட்ட மசோதா இதுவாகும். புதிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா என்ற பெருமையையும் இம்மசோதா பெறுகிறது.
இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் இன்று (வியாழக்கிழமை) மகளிர் மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு