முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு… வெளிநாட்டு நிபுணர் குழு அமைத்து ஆய்வு: சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனு

புதுடெல்லி:
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து வெளிநாட்டு நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து ஆய்வு நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணை கேரள அரசு அணை தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பில்லாத பகுதியில் இருப்பதாக கேரள அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
அதே நேரத்தில் 152 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கும் அளவிற்கு அணை பலமாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்க கோரி ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கில் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
புதிய மனுவில், முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும். இரு மாநில பிரதிநிதிகள் முன்னிலையில் அணை தொடர்பான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையின் கட்டுமானம், நிலத்தின் அமைப்பு, நிலநடுக்கம் சார்ந்து இந்த ஆய்வு இருக்கவேண்டும் எனவும் அணை பாதுகாப்பு சட்டம் 2021-ன் கீழ் நெறிகாட்டு முறைகள் படி பெரியாறு அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கேரள அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அணை உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டதால் மீண்டும் ஆய்வு நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400