ராகிங் செய்தால் கடும் நடவடிக்கை: அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை

சென்னை:
அண்ணா பல்கலைக்கழகம் ராகிங் செய்யும் மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவையில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் சமீபத்தில் மாணவர் ஒருவர் ராகிங் செய்யப்பட்ட சம்பவத்தில் அதே கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதையொட்டி மாணவர்கள் ராகிங் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களிடம், “கடந்த பல வருடங்களாக அண்ணா பல்கலைக்கழகத்தில் ராகிங் என்ற பேச்சே இல்லாமல் இருந்தது. எனவே மாணவர்கள் கல்லூரியில் சேரும்போதே அவர்களுக்கு அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன.
சமீபத்தில் கோவை தனியார் கல்லூரியில் ராகிங் நடந்திருப்பது வருந்தத்தக்கது. இவை போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு ராகிங் செய்யும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்படும். ஆகவே மாணவர்கள் இதைப் புரிந்து கொண்டு ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400