வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை நீக்க ஆர்.கே.நகர் – பெரம்பூர் தொகுதியில்

வாக்குச்சாவடி நிலை அலுவலர் சரிபார்த்த பின்பு வாக்காளர் பட்டியல் விபரங்களை வெளியிட வேண்டும்: மாநகராட்சி மண்டல அலுவலரிடம் மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் கோரிக்கை மனுவை வழங்கினார்..!!சென்னை, நேற்று தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இந்நிலையில் ஆர்.கே.நகர் – பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில்ஆர்.கே.நகர் – பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பாகவாரியாக வீடு, வீடாக சென்று வாக்காளர் சரிபார்ப்பு விபரங்களை கள ஆய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், சென்னை மாநகராட்சி 4-வது மண்டல அலுவலகத்தில் மண்டல அலுவலர் சரவணமூர்த்தியிடம் நேரில் சென்று ஒரு கோரிக்கை மனுவை வழங்கினார். அந்த கோரிக்கை மனுவில் ஆர்.கே.நகர் – பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் முதல் கட்டமாக அனைத்து பாகத்திற்கும் நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று சென்று இறப்பு. இடமற்றம், இரட்டைப் பதிவு, ஆகியவற்றை சரிபார்த்தல் குளறுபடிகளை இன்னும் முறையாக ஏதும் நீக்கப்படவில்லை. இந்த வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை கருத்தில் கொண்டு தங்களின் வாக்குசாவடி மண்டலத்தில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர் நேரில் சென்று சரிபார்த்த பின்பு வாக்காளர் பட்டியல் விபரங்களை வெளியிடவும் என அந்த மனுவில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் எந்த பாகத்தில் எத்த இறப்பு, இடமாற்றம் இரட்டை பதிவு இருக்கிறது என்று கண்டறிந்தஆய்வு நகலையும், நீதிமன்றத்தின் உத்தரவு நகலையும் மாநகராட்சி மண்டல அலுவலரிடம் மாவட்ட கழக செயலாளர் ஆர் எஸ்.ராஜேஷ் அப்போது நேரில் வழங்கினார் இதில் கழக நிர்வாகிகள் உடன் இருந்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400