விசாரணை கைதிகளை நிர்வாணமாக்கி சோதனை செய்வது தனிநபர் உரிமை மீறல்: கோர்ட்டு கண்டனம்

மும்பை:
விசாரணை கைதிகளை நிர்வாணப்படுத்தி அவர்களை சோதனை செய்வது தனிநபர் உரிமைகள் மீறல் ஆகும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயல்களுக்கு கட்டணங்களையும் தெரிவித்துள்ளது.
1993-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கு ஒன்றின் குற்றவாளியாக இருப்பவர் அகமது கமால் ஷேக். விசாரணை கைதியான இவரை கோர்ட்டுக்கு அழைத்து சென்று திரும்பும்போது சோதனை என்ற பெயரில், நிர்வாணப்படுத்தி போலீசார் சோதனையிடுகின்றனர் என குற்றச்சாட்டாக கோர்ட்டில் கூறியுள்ளார்.
அவர்கள், பிற கைதிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையிலேயே இந்த சோதனையில் ஈடுபடுகின்றனர். அது தனது தனிநபர் உரிமையை மீறும் விசயம் மற்றும் அவமதிப்பு ஏற்படுத்த கூடியது ஆகும் தனது மனுவில் கூறியுள்ளார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது காவலர்கள், தகாத மற்றும் ஆபாச பேச்சுகளாக பேசுகின்றனர் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை மும்பை சிறை அதிகாரிகள் மறுத்து உள்ளனர். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என கூறியுள்ளனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரர் கூறுவதில் சில உண்மைகள் இருப்பதற்கான விசயங்கள் உள்ளன. இவரை தவிர, இந்த கோர்ட்டுக்கு அழைத்து வரப்படும் பிற விசாரணை கைதிகளும் இதுபோன்ற புகார்களை தெரிவித்து உள்ளனர்.
விசாரணை கைதிகளை நிர்வாணப்படுத்தி அதிகாரிகள் சோதனை செய்வது என்பது அந்த நபரின் தனிப்பட்ட அடிப்படை உரிமையை மீறும் செயல் ஆகும். அது அவமதிக்க கூடியதும் ஆகும். இது மட்டுமின்றி, ஆபாச அல்லது தகாத வார்த்தைகளை பேசுவதும் விசாரணை கைதியை அவமதிப்பது ஆகும். அதனால், விசாரணை கைதிகளை இனி ஸ்கேனர்கள் அல்லது அதற்கான உபகரணங்களை கொண்டு மட்டுமே சோதனையிட வேண்டும் என மும்பை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
அப்படி உபகரணங்கள் அல்லது ஸ்கேனர்கள் கிடைக்காது என்றால், தனிப்பட்ட முறையிலேயே கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதிகாரிகள் விசாரணை கைதியிடம் தவறாக நடக்கவோ அல்லது அவமதிப்பு செய்யவோ கூடாது. ஆடைகளை களைவதோ, தகாத வார்த்தைகளை பேசுவதோ கூடாது என உத்தரவு தெரிவிக்கின்றது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு