பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-169க்குட்பட்ட சைதாப்பேட்டை, பாரதிதாசன் கிழக்கு தெரு, அப்பாவு நகரில் ஏரியா சபை கூட்டம் துணை மேயர் மு.மகேஷ்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம்.பி.அமித், ஏரியா சபை உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.