அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்ணா பல்கலை மாணவி வழக்கு: விசாரணையின் பெயரால் செய்தியாளர்களை அச்சுறுத்தும் காவல்துறை நடவடிக்கை ஏற்புடையதல்ல! – எஸ்டிபிஐ

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;பாலியல் வழக்குகளில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற சட்டவிதிகள் உள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் கசிந்தது பெரும் விவாதமானது. இந்நிலையில், முதல் தகவல் அறிக்கை எப்படி வெளியானது என்பது குறித்து காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சிறப்புப் புலனாய்வுக்குழு, பத்திரிகையாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பி அவர்களிடம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதியும், சட்டத்தை மதித்தும் பத்திரிகையாளர்கள் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்து வரும் நிலையில், விசாரணைக்குச் செல்லும் பத்திரிகையாளர்களைச் சிறப்புப் புலனாய்வுக் குழு மணிக்கணக்கில் காக்க வைப்பதாகவும், குற்றவாளிகளைப் போல் நடத்துவதாகவும், தேவையற்ற மற்றும் விசாரணைக்குச் சற்றும் பொருந்தாத கேள்விகளைக் கேட்பதாகவும் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மட்டுமின்றி விசாரணைக்குச் சென்ற சில பத்திரிகையாளர்களின் செல்போன் மற்றும் சில மின்னணுக் கருவிகளைச் சிறப்புப் புலனாய்வுக் குழு பறிமுதல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விசாரணையின் பெயரால் செய்தியாளர்களை அச்சுறுத்தும் காவல்துறையின் இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல.இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள காவல்துறை, தொழில்நுட்ப காரணங்களைக் கூறி தப்பித்துக்கொள்ள நினைக்கும் அதேவேளையில், பொதுவெளியில் காணக்கிடைத்த முதல் தகவல் அறிக்கையை தரவிறக்கம் செய்தவர்களை மட்டுமின்றி, அதனை பார்வேர்டு செய்த அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்துவது பத்திரிக்கை சுதந்திரத்தை மீறும் செயலாகும். அவ்வாறு காவல்துறை செயல்படும்பட்சத்தில், பத்திரிக்கையாளர்களுக்குச் சம்மன் அனுப்பி விசாரிக்கும் காவல்துறை, அந்த தகவல் தன்னிடம் இருப்பதாகவும், முதல் தகவல் அறிக்கையில் இன்னென்ன விசயங்கள் உள்ளது, காவல்துறை முறையாகப் பதிவு செய்யவில்லை என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதுகுறித்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி, பத்திரிக்கையாளர்களைப் போன்று காவல்துறை விசாரிக்குமாகவே, நீதிமன்ற உத்தரவு எனக்கூறி, சட்டத்தை மதித்து விசாரணைக்கு ஒத்துழைக்கும் பத்திரிகையாளர்களை, குற்றவாளிகள் போன்று துன்புறுத்துவதையும், அச்சுறுத்துவதை காவல்துறை உடனே நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதோடு, பத்திரிகையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மற்றும் இதர மின்னணுக் கருவிகளைத் திரும்ப வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை