வண்ணார்பேட்டையில் சோக விபத்து – கணவன் மனைவி பலி
- திருநெல்வேலி மாநகரம் வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் கபூர் மற்றும் அவரது மனைவி ஜீனத் பேகம். இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில், பேருந்து இருவர் மீதும் ஏறி இறங்கியது.
- இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- விபத்திற்குப் பிறகு தப்பிச் செல்ல முயன்ற பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







