பெங்களூரு:
இந்தியன் பிரீமியர் லீக் 2023 தொடரின் 24வது ஆட்டத்தில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸை (சிஎஸ்கே) அணிகள் இன்று (17ம் தேதி) இரவு பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றனர்.
ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. சிஎஸ்கே தனது கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. தற்போது சென்னை அணி ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
நான்கு ஆட்டங்களில் 65.66 சராசரி மற்றும் 155.11 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 197 ரன்களை குவித்துள்ளதால், ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சிஎஸ்கே அணி இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபியை தோற்கடித்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு முன்னேறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.