பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, தொடக்கக் கல்வி மற்றும் உயர் கல்வி துறை ஆகிய மூன்று துறைகளின் தணிக்கை நிலுவை பற்றிய விவரங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கூட்டம் க.தனசேகரன், தலைவர் -நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை அவர்களின் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆணையாளர் வருவாய் (ம) நிதி ஆர்.லலிதா, கணக்கு மற்றும் தணிக்கை நிலைக்குழு உறுப்பினர்கள்: எஸ்.பாரதி, கே.சாரதா, சி.ஆனந்தி, ஆ.மாலினி, வி.ராஜகுமாரி, பா.விமலா, தி.கிரண் ஷர்மிலி, எஸ்.தனலட்சுமி, ஜெ.தேவி, எல்.சுந்தர்ராஜன், பரிதிஇளம்சுருதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






