ராமநாதபுரம்:
அப்துல்கலாம் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தார். ராமநாதபுரம் பேராவூர் கிராமத்தின் அருகே 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தென்மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, வருகிற நாடாளுமன்ற தேர்தலின்போது ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து தி.மு.க.வினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பேய்க்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ராஜகண்ணப்பன், தி.மு.க. எம்.பி.கனிமொழி ஆகியார் அப்துல்கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் அப்துல்கலாம் நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






